சவூதியில் இலங்கை பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
இலங்கையிலிருந்து சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கண்டி ஹலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான அனுலா குமாரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆயிரம் நம்பிக்கையுடன், பொருளாதாரப் பிரச்சினைகளைத் தாங்க முடியாமல் அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை செய்யச் சென்றுள்ளார்.
சவூதி அரேபியா சென்று கிட்டத்தட்ட 3 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், கடந்த 22ம் தினதி, மற்றொரு பெண், அவரது போனில் அழைத்து, அனுலா மின்சாரம் தாக்கி இறந்ததாக மூத்த மகளுக்கு தெரிவித்தார்.
ஆனால் தனது தாயின் உடல் படம் காட்டப்படவில்லை என்று அனுலாவின் மகள் கூறியுள்ளார்.
அனுலா மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறினாலும், பிள்ளைகளோ அல்லது அவரது கணவரோ அதை நம்பவில்லை. நான்கு பெண் பிள்ளைகளின் தாயான அனுலாவின் கணவரும் மரத்தில் இருந்து விழுந்து பாதிக்கப்பட்டுள்ளார்.
மூத்த மகள் தனது தாயின் உடலை நாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.