லெபனானில் வசிக்கும் இவரை தெரியுமா? உதவி கோரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது, இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் காணப்படும் நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடுகிறது.
இவர் இலங்கை வம்சாவளியினர் என்றும், தற்போது லெபனானில் வசிப்பவர் என்றும் நம்பப்படுகிறது.South இவர் "ரஹ்மா (Rahma)" என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இவரது சரியான அடையாளம் மற்றும் குடும்ப விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அல்லது இவரது உறவினர்களை கண்டறிவதற்கு உதவக்கூடிய எந்தவொரு தகவலும் உங்களிடம் இருந்தால், கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தூதரக விவகாரப் பிரிவு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு 16 ஆம் தளம், 'சுகுருபாய',
பத்தரமுல்ல தொலைபேசி: +94 11 227 5525
மின்னஞ்சல்: consular@mfa.gov.lk