இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் தூதுவர் வெளியிட்ட தகவல்!
இஸ்ரேலில் பணிப்பெண்ணாக இருந்த அனுலா ரத்நாயக்க என்ற பெண் சுட்டுக்கொல்லப்பட்டதை நேரில் கண்ட சாட்சி ஒன்றை அவரது உறவினர்கள் முகநூல் மூலம் வெளியிட்டிருந்தாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் இன்று நேரலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவரது சடலம் மீட்கப்பட்டு அது அவரது சொந்த உடல் என்று உறுதிப்படுத்தப்படும் வரை, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட முடியாது என்று தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், காணாமல்போன இரண்டு இலங்கையர்களைத் தவிர, இஸ்ரேலில் வசிக்கும் ஏனைய இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.