இத்தாலியில் இலங்கையருக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
இத்தாலியில் சுற்றுலா விடுதியில் வேலை செய்துவந்த இலங்கையர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து சம்பவம் கடந்த 1905-2023 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 43 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ருவன் மனோஜ் குமார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர் 6 மாத வேலைக்காக சுற்றுலா விடுதியில் பணிபுரிய வந்துள்ள நிலையில் ஓவியமொன்றினை வரையும் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த உயிரிழப்பு உடல் நலக்குறைவு காரணமாக நேர்ந்ததா? அல்லது கவனக்குறைவினால் ஏற்பட்டுள்ளதா? என்பதினை அறிய பிரேத பரிசோதனைக்காக சடலம் லிபாரி தீவு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர் வென்னப்புவ லுனுவில பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.