ரஷ்ய - உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய மோசடி ; கைதானவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்
ரஷ்ய - உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய மோசடி தொடர்பில் மாவனெல்லையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தொழில் நிறுவன உரிமையாளர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவில் சட்டவிரோதமாக போர் முனைக்கு அனுப்பப்பட்ட இலங்கையர்களில் 300க்கும் மேற்பட்டோர் இன்னும் போர் முனையில் இருப்பதாகவும், சுமார் 200 பேர் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபோட் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரேனில் இராணுவ சேவைக்காக நாட்டை விட்டு வெளியேறிய 14 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.