ஜெனீவாவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த ஈழத்தமிழர்கள்!
சுவிஸ்சர்லாந்து – ஜெனீவாவில் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை நேரப்படி இன்றையதினம் (19-09-2022) பிற்பகல் 06.00 மணியளவில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டமானது சுவிஸ்சர்லாந்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.
ஜெனீவா கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில் இந்த போராட்டமானது முன்னெடாக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புலிக்கொடியை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.