பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத இலங்கை தமிழ்ப்பெண்...என்ன நடந்தது?
பிக் பாஸ் சீசன் 5 தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொருவாரமும் இந்த வீட்டில் பிரச்சனைக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக இலங்கை தமிழ் பெண்ணான மதுமிதா அழுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதன் காரணம் என்னவெனில், இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டின் தலைவராக மதுமிதா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரோ தனது பேச்சை ஒருவரும் கேட்பதில்லை எனக் கூறி கதறி அழுகிறார்.
ஒவ்வொருவரும் ஒரு ரூல்ஸ் போட்டுக்கொள்கிறார்கள் என கூறி அழுகிறார். இந்த நிலையில் இசை வாணியும் ஒருபுறம் அழுதுகொண்டிருந்தார். மேலும் வீட்டில் இசைவாணியின் ஆளுமை இருப்பதாக கருதப்படுகிறது. அதன் காரணமாக ஏதேனும் பிரச்சினை உருவாகியுள்ளதா என்பதும் தெரியவில்லை.
நேற்றைய எபிசோடில் கூட சுவாரஸ்ய மற்ற போட்டியாளர்களாக பவானி மற்றும் மதுமிதா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு இரவு முழுவதும் விழித்திருந்து நெருப்பு அணையாமல் பார்க்கும் தண்டனையை பிக்பாஸ் வழங்கினார்.
இவை அனைத்தும் மதுமிதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே அவரது கதறல் அழுகைக்கு காரணமாக கூறப்படுகிறது.