இலங்கைத் தமிழருக்கு லண்டனில் நேர்ந்த கதி!
லண்டனில் இலங்கையைச் சேர்ந்த தமிழரான புகைப்படகலைஞருக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கைத் தமிழரான ஸ்ரீதரன் சயந்தன்(42) என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொடலாகும் ஆசையில் தம்மை நாடிய பெண்களை தமது ஆசைக்கு இரையாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சயந்தன் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது இந்த வழக்கில் மேலதிக தகவல் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் காவல்துறையை நாட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.