கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் மாயம்! பொலிஸார் வெளியிட்ட புகைப்படம்
கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் மாயமாகியுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
87 வயதான தம்பிராஜா சிறிபதிராஜா (Thambirajah Sripathirajah) என்ற முதியவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
MISSING:
— Toronto Police Operations (@TPSOperations) June 8, 2022
Thambirajah Sripathirajah, 87
- last seen on June 7, at 6:20 p.m., in the Birchmount Rd & Bertrand Ave area
- described as 5'7", slim build, 120 lbs., short grey hair, grey moustache
- last seen wearing a grey hooded sweatshirt#GO1080031
^al pic.twitter.com/VJ5tVVohZR
காவல்துறையினரின் தகவலின் படி,
காணாமல்போன இலங்கை தமிழர் நேற்று (07-06-2022) மாலை 6.20 மணிக்கு Birchmount Rd & Bertrand பகுதியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல்போன நபர் 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், அவர் காணாமல்போன போது சாம்பல் நிற உடை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
மேலும், காணாமல்போயுள்ள நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறு ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.