பிரான்ஸ் செல்லமுயன்ற இலங்கை தமிழ் ஏதிலி உயிரிழப்பு!
பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய ரியூனியனில் தங்கியிருந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் படகு ஒன்றில் அங்கு வந்து ரியூனியனில் கரை சேர்ந்த சுமார் 120 பேரில் ஒருவரான கிழக்கு இலங்கையைச் சேர்ந்த 36 வயதான சேந்தன் எனும் இளைஞரே , அவரது ஏதிலி தஞ்சம் மறுக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மேன் முறையீட்டு மனுவின் முடிவு இன்னமும் கிடைக்கவில்லை என்று நண்பர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. தங்கியிருந்த இடத்தில் சில தினங்க ளுக்கு முன்னர் அவர் கழிப்பறையில் மயங்கி வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
அதேசமயம் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன்உடலை தாயகத்துக்குக் கொண்டு செல் வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் குடும்பத் தினரது சம்மதத்துடன் அவரது உடல் ரியூனியனில் தகனம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
ரியூனியன் தீவுக்கு வந்த படகு அகதிகள் 160 பேரில் சுமார் அரைப்பங்கினர் நாட் டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
 
ஏனையோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களில் சிலருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்ட நிலையில்,   அனுமதி  மறுக்கப்பட்ட  பலர் மேன்முறையீடுசெய்து விட்டு இன்னமும் ரியூனியனில்  காத்திருக்கின்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        