பிரித்தானியாவில் ஓடும் பேருந்தில் இலங்கைத் தமிழரின் மோசமான செயல் ; வழங்கப்பட்ட தண்டனை!
பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரிய ஒரு இலங்கைதமிழர் பாலியல் குற்றத்தில் கைது செய்யபட்டு 28 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்து லிவர்பூல் நகரில் செயின்ட் ஹெலன்ஸ், பில்லிங்கே கிரசென்ட்டைச் சேர்ந்த, இலங்கையைச் சேர்ந்த தஞ்சம் கோரியவரான 42 வயதான நபர் , லண்டனிலிருந்து லிவர்பூலுக்குச் சென்ற நேஷனல் எக்ஸ்பிரஸ் பேருந்தில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பேருந்தில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு மாணவிகள்
இரு பிள்ளைகளில் தந்தையான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இரவு நேர 421 சேவையில் அவர் அந்தப் பெண்களை நோக்கி இருக்கைகளை நகர்த்தி, அவர்கள் உறங்கும்போது அவர்களைத் தவறாகத் தொட்டு, பின்னர் அவர்கள் எழுந்ததும் முறைத்துப் பார்த்ததாக லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது விசாரணைக்கு ஆஜராகத் தவறினார்.
அவர் இரண்டு பாலியல் தாக்குதல் குற்றங்களையும், பிணை நிபந்தனையை மீறியதையும் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
பதிவாளர் மார்க் ஃபோர்டு கே.சி., அவர் ஒரு காம வேட்டையாடும் (Predatory) பாணியில் நடந்துகொண்டதாகவும், தான் செய்ததவறுக்கு எந்த வருத்தத்தையும் காட்டவில்லை என்றும் கூறினார்.
அவர் 10 ஆண்டுகளுக்குப் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் (Sex offenders register) கையெழுத்திட வேண்டும். தஞ்சம் கோரிய முடிவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்து வருவதாகவும், அதுவரை அவர் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.