மசாஜ் நிலையத்தில் இரகசிய கமராக்கள்; வசமாக சிக்கிய பெண்கள்
பண்டாரவளை, எல்லத்தோட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் நிலையமொன்றில் இரகசியமாக கமராக்கள் பொருத்தி காணொளிகளை பதிவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் மசாஜ் , நிலையத்தின் உரிமையாளர் உட்பட மூன்று பெண்களை பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட காணொளிகள் தொலைபேசியில்
குறித்த நிலையத்தில் இரகசிய கமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன், அவற்றின் மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நிலையத்தின் உரிமையாளரும் மேலும் இரு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று (22) செவ்வாய்க்கிழமை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட காணொளிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்திற்கு மேலதிகமாக வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.