வாழ வழிதேடி இஸ்ரேல் சென்ற இலங்கையர் ; பணயக்கைதியாக பிடிக்கப்பட்டு உயிரிழப்பு
மோதலில் ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைப்பிரஜையான சுஜித் பண்டார யட்டவர உயிரிழந்துள்ளதை இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்களின் இன்டர்போல் பிரிவினரே இதனை உறுதிசெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாழ வழிதேடி இஸ்ரேல் சென்ற இலங்கையர்
உயிரிழந்த சுஜித்பண்டார யட்டவரவின் பிள்ளைகளின் மரபணுவை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டவேளை இலங்கையர் ஒருவர் காணாமல்போயிருந்தார் .
அதனை தொடர்ந்து அடையாளம் காணப்படாத உடல் ஒன்றை சுஜித் பண்டாரவின் பிள்ளைகளின் மரபணுவுடன் ஒப்பிட்டு சோதனை செய்தவேளை அது இலங்கையரினது உடல் என்பது உறுதியானது.
உயிரிழந்தவர் வென்னப்புவை சேர்ந்தவர் என்றும், கடந்த 2015 இல் வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் சென்றிருந்தாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.