உயிரை துச்சமாக நினைத்து உக்ரைனில் இருக்கும் 27 இலங்கையர் எடுத்துள்ள அதிரடி முடிவு!
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14 வது நாளாக தாக்குதலை தீவிரமாக தொடுத்து வருகின்றது. இந்நிலையில் பல லட்சம் பேர் உக்ரைனை விட்டு அண்டை நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் வசித்துவரும் 27 இலங்கையர்கள், அந்நாட்டிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்க விருப்பம் வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G.L.Peiris) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும அவர் தெரிவித்தது,
பெலாரஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு ஒரு மாத கால கட்டணமற்ற விடுமுறை வழங்க பெலாரஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.