நாட்டுக்கு பெருமை; சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வான இலங்கை மாணவி!
எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,கணிதம்) கல்வியை ஊக்குவிக்கும் தேசிய நடவடிக்கையின் மற்றொரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையைச் சேர்ந்த 200 மாணவர்கள் தற்போது STEM கல்வித் திட்டத்தின் கீழ் தீவிரமாகப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் ஒரு விசேட நிகழ்வாக, மிகவும் கடுமையான தேர்வு முறைக்குப் பிறகு, 18 வயதான செனீசா குணவர்தன (Seneesa Gunawardena) 'ShakthiSAT International Mission' சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ இராஜதந்திர சந்திப்புகள்
இந்த அதிகாரப்பூர்வத் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 22 முதல் 31 வரை இந்தியாவின் கெளதம புத்த பல்கலைக்கழகத்தில் (Gautam Buddha University) நடைபெறவுள்ளதுடன், இதற்கான பயணம் ஆகஸ்ட் 21 முதல் 31 வரை புதுடெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயணத்தின் போது, இந்தியப் பிரதமரும் இந்தியக் குடியரசுத் தலைவரும் கலந்துகொள்ளும் அதிகாரப்பூர்வ இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றில் பிரதிநிதியாகச் செனீசாவும் கலந்துகொள்ளவுள்ளார்.