ஐ.சி.சி பட்டியிலில் முதலிடத்திற்கு பிடித்த இலங்கை நட்சத்திர வீரர்!
ஐசிசி ஆண்களுக்கான ரி20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இலங்கை நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) முதல் இடத்தை பிடித்துள்ளார்.
நடப்பு ரி20 உலகக் கிண்ண போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வனிந்து ஹசரங்கா தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
இதேவேளை 776 புள்ளிகளுடன் தற்போது தரவரிசை பட்டியலில் வனிந்து ஹசரங்கா முதலிடம் வகிக்கும் நிலையில், தென்னாபிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சி இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் ஐசிசி ரி20 கிரிக்கெட்டின் சகலதுறை ஆட்டக்காரர் பட்டியலிலும் வனிந்து ஹசரங்கா நான்கு இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார்.
சகலதுறை ஆட்டக்காரர் பட்டியலி பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல்ஹசன் ( Shakib Al Hasan) 271 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
வனிந்து ஹசரங்கா 2021 இல் சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக (34) விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.