ரஸ்ய போரில் இலங்கை இராணுவவீரர்கள்; மேற்குலநாடுகள் கவலை
உக்ரைன் - ரஸ்யா போரில் இலங்கையின் முன்னாள் இராணுவவீரர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுவது தொடர்பில் மேற்குலநாடுகள் கவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையின் முன்னாள் இராணுவவீரர்கள் தொடர்பில் மேற்குலகின் முன்னணி நாடொன்று கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூலிப்படையினராக போர்புரியும் இலங்கை வீரர்கள்
மேற்குலகம் வெளியிட்ட கரிசனையை தொடர்ந்தே இலங்கை அரசாங்கம் கூலிப்படையினராக போர்புரியும் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்தே பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் போரிடும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தவர்களின்குடும்பங்கள் தங்களிடம் விபரங்களை கோரியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.