டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (31) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 76 சதம், விற்பனைப் பெறுமதி 319 ரூபாய் 31 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபாய் 27 சதம், விற்பனைப் பெறுமதி 367 ரூபாய் 77 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபாய் 46 சதம், விற்பனைப் பெறுமதி 402 ரூபாய் 92 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 38 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 48 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 64 சதம், விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 12 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 80 சதம், விற்பனைப் பெறுமதி 249 ரூபாய் 11 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 94 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 1 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.