அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (23) உடன் ஒப்பிடுகையில்,
மக்கள் வங்கி
அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 298.77 ரூபாவிலிருந்து 299.74 ரூபாவாக அதிகரித்துள்ளது.
விற்பனை பெறுமதி 316.44 ரூபாவிலிருந்து 317.47 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி
அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 297.68 ரூபா, 316 ரூபா என்ற நிலையில் உள்ளன.
சம்பத் வங்கி
அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 298 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக அதிகரித்துள்ளது.
விற்பனை பெறுமதி 313 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.