இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடுவெல, ரணால பகுதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டைப் பூட்டிவிட்டு திறப்பினை வாசலில் இருந்த ஒரு காலணிக்குள் மறைத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தனர்.
நேற்று முன்தினம் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், திறப்பினை மிக எளிதாகக் கண்டெடுத்து வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
வீட்டில் இருந்த பெறுமதியான தங்க நகைகளை அந்த நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
வீட்டில் கொள்ளை
பாடசாலை முடிந்து வரும் பிள்ளைகளின் வசதிக்காகவே திறப்பினை வெளியில் மறைத்து வைத்ததாகத் தெரிவித்த உரிமையாளர், தற்போது பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார்.
பாடசாலை முடிந்து வரும் பிள்ளைகளுக்காகவோ அல்லது தாமதத்தைத் தவிர்க்கவோ வாசற்படிக்கு அடியில், பூந்தொட்டிகளில் திறப்பினை வைப்பதைத் திருடர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து நவகமுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பொதுமக்களை இவ்வாறான பாதுகாப்பு அற்ற செயல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்