இலங்கை மக்கள் ஒருவேளையே உண்கின்றனர்; யுனிசெப் கவலை
பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக இலங்கையில் 10 இல் 7 குடும்பங்கள் தாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது 1.7 மில்லியன் சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான செய்தி தொடர்பாளர் பிஸ்மார்க் ஸ்வாங்கின் சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் சிறுவர் நெருக்கடியாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், பொருளாதார நெருக்கடிகளின் சுமையை 1.7 மில்லியன் சிறுவர்கள் சுமக்க வேண்டியுள்ளதாகவும் வருத்தம் வெளியிட்டார்.
தெற்காசியாவிலேயே குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாடு காணப்படுகின்ற நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாகவுள்ளதாகவும் பொருளாதார நெருக்கடியானது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டு நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மூன்று வேளை உணவு உட்கொண்டவர்கள் அதனை இரு வேளையாகவும் , இரு வேளை உட்கொண்டவர்கள் அதனை ஒரு வேளையாகவும் குறைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.