கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையின் மற்றொரு எம்.பி!
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், (Mano Ganesan) ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை (17) வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், "ரெபிட் அன்டிஜன்" சோதனையில் "பொசிடிவ்" பெறுபேற்றை பெற்றுள்ளேன். தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சைக்கு உள்ளாயுள்ளேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன் என டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
"ரெபிட் அன்டிஜன்" சோதனையில் "பொசிடிவ்" பெறுபேற்றை பெற்றுள்ளேன். தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சைக்கு உள்ளாயுள்ளேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன். #manoganesan #lka pic.twitter.com/oQSsLldiUU
— Mano Ganesan (@ManoGanesan) November 17, 2021