இந்தோனேஷியாவில் உள்ள இலங்கை தமிழ் தாய் மற்றும் மகளின் கண்ணீர் கோரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Indonesia
By Vironika Oct 16, 2026 03:49 AM GMT
Report

இந்தோனேஷியாவில் 12வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வரும் கீதா பாணு பிரணவன் என்ற தாயொருவரும் அவரது மகளும் இலங்கை திரும்புவதற்கு உதவியளிக்குமாறு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே தனது கணவர் போதுமான மருத்துவ வசதிகளின்றி உயிரிழந்துள்ள நிலையில் தற்போது தாங்கள் உணவு, மற்றும் தங்குமிடம் ஆகியவற்றுக்காக வழங்கப்பட்ட பணத்தை நிறுத்துவதாக தொண்டு அமைப்பு அறிவித்துள்ளமையால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேஷியாவில் உள்ள இலங்கை தமிழ் தாய் மற்றும் மகளின் கண்ணீர் கோரிக்கை | Sri Lankan Mother And Daughter S Tearful Plea

சமூக வலைத்தள பதிவு

தாம் நாடு திரும்புவதற்கு உதவியளிக்குமாறு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது தமது நெருக்கடியான நிலைமைகளை வெளிப்படுத்தினார்கள்.

அவர்கள் தெரிவித்தவை வருமாறு, நாம் இந்தோனேசியாவில் 2014ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தில் பதிவு செய்து இங்கு அகதிகளாகவே இதுவரையில் இருக்கின்றோம்.

என் கணவர்  2022ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு போதுமான மருத்துவ உதவிகள் கிடைக்காமையினால் உயிரிழந்தார்.

யாழில் திடீர் பணக்காரருக்கு அதிரடி காட்டிய அதிகாரிகள் ; 8.5 கோடி ரூபாய் சொத்துக்கு நேரந்த கதி

யாழில் திடீர் பணக்காரருக்கு அதிரடி காட்டிய அதிகாரிகள் ; 8.5 கோடி ரூபாய் சொத்துக்கு நேரந்த கதி

அதன்பின் நானும் மகளும் தனியாக இருந்தநிலையில் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் எம்மை இந்தோனேஷியாவில் செயற்படும் 'ஜயாசன் சித்த வடாத் சுவாதய' என்ற அரச சார்பற்ற அமைப்பிடம் ஒப்படைத்தார்கள்.

பின்னர் நாம் வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவோம் என்று கூறப்பட்டபோதும் ஏமாற்றமே எஞ்சியது. இந்தாண்டின் ஜுலை மாதத்தில் நாம் தங்கியிருந்த அறை வாடகை செலுத்துவதற்கான கொடுப்பனவையும் குறித்த அமைப்பு நிறுத்திவிட்டது.

அதன்பின்னர் எமது உணவுக்காக வழங்கிய பணத்தை தற்போது மிகவும் குறைத்து வழங்குகின்றார்கள். இந்நிலையில் தற்போது உணவுக்கான பணத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளார்கள்.

தமிழர் பகுதியொன்றில் வீதிகளில் இடம்பெறும் ஆபத்தான செயற்பாடு ; சட்ட நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை

தமிழர் பகுதியொன்றில் வீதிகளில் இடம்பெறும் ஆபத்தான செயற்பாடு ; சட்ட நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை

நாம் எமது நாட்டுக்கு திரும்பிச் செல்கிறோம் எங்களை இலங்கைக்கே அனுப்பி விடுங்கள் என்று ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்துக்கு பல முறை மின்னஞ்சல் அனுப்பினாலும் அதற்கு பதிலளிக்கமறுக்கிறார்கள்.

இந்தோனேஷியாவில் வேலை செய்வதற்கு எமக்கு அனுமதி இல்லை. ஒரு தனித்தாயாக என்னால் மகளுடன் இங்கே எப்படி வசிப்பது என்று தெரியவில்லை. எனது பெற்றோர் மற்றும் என் கணவரின் பெற்றோரும் இப்போது உயிருடன் இல்லை.

உறவினர்களும் யாரும் என்னுடன் சரியாகப் பேசுவதில்லை. நானும் மகளும் அடுத்த மாதத்திலிருந்து பட்டினி நிலைக்கே செல்வோம். தயவு செய்து அவசரமாக எமக்கு இலங்கை திரும்பிச் செல்வதற்கு உதவி செய்யுங்கள் என்று கண்ணீருடன் கோரியுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US