இலங்கை தொழிலாளர் அமைச்சகத்தின் புதிய அதிரடி முடிவு!
16-20 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் திட்டங்களைப் பெறுவதற்காக தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பல்வேறு தொழில் சூழல்களுக்கு மாணவர்கள் பயிற்சியளிக்கப்படாததால் தொழிலாளர் துறையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், 16-20 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை ஒரு மாதத்திற்கு 20 மணி நேர பயிற்சித் திட்டங்களுக்கு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு பணம் வழங்குவதற்கு தனியார் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் அமைச்சகம் அனுமதி வழங்கும். என தெரிவித்துள்ளார்.