நாட்டுக்கு வரும் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரின் உடல் ; மனைவி கண்ணீர் கோரிக்கை
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர் ன பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று நாட்டிற்கு எடுத்துவர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஶ்ரீலங்கன் ஏயார் லயின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பூதவுடல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, பூதவுடல் கம்பஹா − கனேமுல்ல பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில், பிரியந்தவின் மனைவி நிலுஷி கூறுகையில்,
இச்சம்பவத்தினால் தாம் மிகுந்த மனவேதனை அடைவதாக கூறிய அவர், கணவனின் எஞ்சிய எலும்புகளையாவது பெற்றுக் கொண்டால், தனது அன்புக் கணவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சந்தர்ப்பம் தமக்கு கிடைக்குமெனவும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.


