தமிழக கடலில் வீசப்பட்ட இலங்கை தங்க கட்டிகள்!
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டு, தமிழக கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாகவும் இன்றும் தொடர்கிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் நாட்டின் வேதாளை சிங்கிவலை குச்சி மீன்பிடி கிராம கடல் எல்லையில் தங்கக் கட்டி வீசப்பட்டதாக கூறப்படுகின்றது. இலங்கையில் இருந்து ஒரு தொகை தங்கக் கட்டிகள் தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்டுள்ளன.

ஐந்தாவது நாளாகவும் தேடுதல் பணி
இதன்போது, பாதுகாப்புத் தரப்பினர் குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டமையால், கடத்தல் காரர்களால் தங்கக் கட்டிகள் கடலில் வீசி தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கடலில் வீசிய கடத்தல் தங்க கட்டிகளை கடந்த நான்கு நாட்களாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர்.

எனினும், தங்கம் கிடைக்காத காரணத்தினால் இந்தியாவின் வட மாநிலத்தில் இருந்து கடலுக்கு அடியில் பொருட்களை தேடும் ஸ்கேனர் கருவி வரவழைக்கப்பட்டு இன்று ஐந்தாவது நாளாகவும் தேடுதல் பணி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இன்றைய தேடுதல் நடவடிக்கையில் ஆழ் கடலில் நீந்தும் திறன் கொண்ட கூபா வீரர்களை கொண்டு தேடுதல் பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.