நாளுக்கு நாள் அழகாகி கொண்டே போகும் இலங்கைப் பெண் ஜனனி! வைரல் புகைப்படம்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டு விளையாடி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6யில் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஜனனி என்பவர் கலந்துகொண்டார்.
இவர் பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்துகொண்ட லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.
பிக்பாஸ் வீட்டில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார், இது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது,
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி நேற்று அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து புடவைக் கட்டி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.