மில்லியன் கணக்கான நெட்டிசன்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட இலங்கை சிறுமி!
நெற்பயிர் விளைந்து நிற்கும் வயல்வெளியில், குட்டி முள்ளம்பன்றி ஒன்றைச் செல்லப் பிராணியாகத் தன் பின்னே கூட்டிச்செல்லும் சிறுமி ஒருவரின் நெஞ்சை நெகிழவைக்கும் காணொளி, தற்போது உலகளவில் மில்லியன் கணக்கான நெட்டிசன்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வைரலாகி வருகிறது.
இந்த அழகான காணொளி இலங்கையில் அழகு பொங்கும் பிதேசங்களில் ஒன்றான பொலனறுவையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளி முதன்முதலில் கடந்த ஜூன் 11 ஆம் திகதி, ஒருவரின் முகநூல் கணக்கில் பதிவேற்றப்பட்டது.

காட்டுத்தீயாய் பரவிய காணொளி
இதன் குறிப்பு மற்றும் தலைப்பு முழுமையாகச் சிங்கள மொழியிலேயே எழுதப்பட்டிருந்தது. மேலும், அதே முகநூல் கணக்கிலிருந்து அச்சிறுமியும் முள்ளம்பன்றியும் ஒன்றாக விளையாடும் இன்னும் பல பிரத்யேகக் காணொளிகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான மக்களின் மனங்களைத் தொட்ட இந்த உன்னதமான அன்புக்கதை, முற்றிலும் நம் இலங்கைக்கு உரிய ஒரு அழகான கிராமியக் கதையாகும்.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, பல நெட்டிசன்களும் சில சர்வதேச ஊடகங்களும் இந்த சம்பவம் பங்களாதேஷில் இடம்பெற்றது எனத் தவறான தகவல்களைப் பரப்பி வந்தமை குறிப்பிடத்தக்கது.