இலங்கை முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மாலிங்கவுக்கு கிடைத்த நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் மூலோபாய பந்துவீச்சு பயிற்சியாளாராக இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியில் இலங்கை அணிகளின் முன்னாள் கேப்டேன் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவை (Lasith Malinga) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெறவுள்ள இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளின்போது இலங்கை அணியின் முலோபாய பயிற்சியாளாராக லசித் மாலிங்க செயற்படுவார்.
இந்த இருவகை கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளிக்கும் மாலிங்க, தந்திரோபாய நுண்ணறிபு மற்றும் தொழில்நுட்ப நிவுணத்தவத்தை வழங்கி இத் தொடரை எதிர்கொள்ள செய்வார்.
மாலிங்கவின் பரந்த அனுபவம், கடைசிக் கட்ட (டெத் ஓவர்கள்) பந்துவீச்சு நிபுணத்துவம் என்பன, குறிப்பாக இருபது 20 ஓவர் கிரிக்கெட் தொடரின்போது இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு பெரிதும் உதவும் என நம்புவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்றபோதும் மாலிங்க பயிற்சியாளர் பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.