மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த இலங்கை கால்பந்தாட்ட அணி!
சிஷெல்ஸ் அணிக்கு எதிராக இன்று (19) வெள்ளிக்கிழமை இரவு நடைபெற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இலங்கை அணி தேல்வியடைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கால்பந்து போட்டித் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி சீசெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இலங்கை அணி 22 முறையாக கிண்ணத்தை தவறவிட்டது.
மேலும் இந்த போட்டியில் தண்டைக்காலத்தில் 3 -1 என்ற ரீதியில் சீசெல்ஸ் அணி வெற்றி ஈட்டியுள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் 21 வருடங்கள் நீடிக்கும் வெற்றிக் கிண்ணத் தாகத்தை இன்றைய போட்டி மூலம் இலங்கை தீர்த்துக்கொள்ளும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் இந்த தோல்வி இலங்கையர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் இலங்கை அணி கடைசியாக 2000ஆம் ஆண்டு மாலைதீவுகளில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சம்பியனாகியிருந்தது.
அதன் பின்னர் இறுதிப் போட்டி ஒன்றில் இலங்கை சிரேஷ்ட அணி பங்குபற்றுவது இதுவே முதல் தடவையாகும். மேலும் இந்த போட்டியில் தோல்வியை தழுவியது பெரும் ஏமாற்றத்தை ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.