சர்வதேச கடற்பரப்பில் விபத்து ; இலங்கை கடற்றொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு

Sri Lanka Sri Lanka Navy Sri Lanka Fisherman Ship
By Viro Oct 29, 2025 07:29 PM GMT
Viro

Viro

Report

கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை, தெவிநுவர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுச் சென்ற IMUL-A-0066-MTR எனும் பல நாள் மீன்பிடிக் கலன், மாலைதீவுக்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் இன்று (29) அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான படகு, நீரோட்டத்தின் வழியே இந்தோனேசிய கடல் எல்லை வரை அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அதில் தப்பிய நான்கு கடற்றொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச கடற்பரப்பில் விபத்து ; இலங்கை கடற்றொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு | Sri Lankan Fishermen Safely Rescued At Sea

கடலில் விபத்து

ஆறு கடற்றொழிலாளர்களுடன் பயணித்த இந்தப் படகு, ஒக்டோபர் 16 ஆம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், விபத்தின்போது ஒரு கடற்றொழிலாளர் காணாமல் போயுள்ளார்.

அத்துடன் படகின் மேல் தளத்தில் இருந்த ஐவரில் ஒருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது. கவிழ்ந்த படகின் மீது இருந்த நான்கு கடற்றொழிலாளர்களும் இந்தோனேசிய மீன்பிடிக் கலன் ஒன்றினால் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மூலமாகவே இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள், அருகில் உள்ள வர்த்தகக் கப்பல் ஒன்றுக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கத்திமுனையில் அட்டகாசம் ; விற்பனை நிலைய உரிமையாளருக்கு அரங்கேற்றப்பட்ட சம்பவம்

கத்திமுனையில் அட்டகாசம் ; விற்பனை நிலைய உரிமையாளருக்கு அரங்கேற்றப்பட்ட சம்பவம்

இது குறித்து கருத்துத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சுசந்த கஹவத்த, "மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஏற்கனவே புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சுமார் 300 கடல் மைல்கள் தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளதால், பயணத்திற்கு சிறிது காலம் எடுக்கும். ஆனாலும், கூடிய விரைவில் இந்த கடற்றொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்," எனக் குறிப்பிட்டார். 

துஸ்பிரயோகம் செய்ய கடத்தி செல்லப்பட்ட சிறுமிக்கு நடுவீதியில் நடந்த சம்பவம் ; துடிதுடித்து பிரிந்த உயிர்

துஸ்பிரயோகம் செய்ய கடத்தி செல்லப்பட்ட சிறுமிக்கு நடுவீதியில் நடந்த சம்பவம் ; துடிதுடித்து பிரிந்த உயிர்

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US