3 குழந்தைகளை கொன்று இளம் தாய் செய்த செயல் ; அதிர்ந்து போன குடும்பம்
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியை சேர்ந்தவர் சந்தியா கவுர் (வயது 36). இவருக்கு திருமணமாகி கணவரும், 3 குழந்தைகளும் இருந்தனர்.
இதனிடையே, சந்தியாவின் கணவர் கடந்த சில மாதங்களுக்குமுன் உயிரிழந்தார். கணவனை இழந்த சந்தியா தனது தாயார் வீட்டில் தங்கி இருந்து குழந்தைகளை வளர்த்து வந்தார்.

பிரதே பரிசோதனை
இந்நிலையில், சந்தியா கவுர் வீட்டில் இருந்த 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
ஒரு குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற சந்தியா எஞ்சிய 2 பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு சந்தியா தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.