முதலமைச்சர் விஜயை சந்தித்த இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர்
சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கதீஸ்வரன் , தமிழக முதலமைச்சர் விஜய்யை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய்க்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், இரு நாட்டு மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கதீஸ்வரன் கலந்துரையாடியுள்ளார்.

iஇதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்தத் தொடர்புகளைத் தொடர்ந்து பேணி வளர்ப்பதில் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதி உயர் ஆணையர் கணேசநாதன் கதீஸ்வரன் , முதலமைச்சர் விஜயிடம் எடுத்துக்கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.