ஈரானின் ஆன்மீக தலைவர் கமெய்னி நினைவுக் குறிப்பேட்டில் கையொப்பமிட்ட இலங்கை பிரதிநிதிகள்
ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிக்கடமைகள் தெஹ்ரானில் நடைபெற்றுவரும் நிலையில், அதில் பங்கேற்ற இலங்கை பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஈரான் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தெஹ்ரானில் நடைபெற்று வரும் இறுதிக்கடமைகளில் கலந்துகொண்டனர்.

இதன்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த அதிதிகளுக்கான நினைவுக் குறிப்பேட்டில் இருவரும் தமது அனுதாபச் செய்தியை பதிவு செய்து கையொப்பமிட்டதுடன், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடனும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
மேலும், ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் எம்.ஐ. பசீஹா அஸ்மி மற்றும் இலங்கைத் தூதரக அதிகாரிகள், இலங்கை பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.