நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம் ; இருவர் பலி ; களமிறக்கப்பட்ட STF
Update : நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கவலைக்கிடமாக இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைத்துக் கைதிகளும் உடனடியாக நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவம் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் இணைந்து மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு தரப்பினரிடயே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பதற்றமான நிலை உருவாகியுள்ளது.