ஒரே நாளில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் நேற்றைய தினம் (28-11-2022) திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.
கொழும்பில் மூன்று வெவ்வேறு இடங்களில் துடுப்பாட்ட வீரர்களான பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க மற்றும் பந்துவீச்சாளர் கசுன் ராஜித ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி - பல்லேகலையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் விளையாடியருந்தனர்.
அத்துடன், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடு இலங்கை குழாமில் சரித் அசலங்கவும் இடம்பெற்றுள்ளார்.
கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று (29-11-2022) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் நடைபெறவுள்ளது.
எனவே குறித்த போட்டிக்கு தயாராகும் வகையில், நிச்சயதார்த்த நிகழ்வுகள் முடிந்ததோடு இன்று பிற்பகல் இவர்கள் மீண்டும் இலங்கை அணியுடன் இணையவுள்ளனர்.