தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் இலங்கை தம்பதி!
இலங்கையில் இருந்து தஞ்சம் தேடி படகு மூலம் தமிழகத்தின் ராமேஸ்வரம் அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியில் வயதான கணவன், மனைவி கடற்கரையில் மயங்கிக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி, மற்றும் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இதுவரையில் 85-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சம் தேடி தமிழகம் சென்று உள்ளனர்.
இந்த நிலையில் திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.
குறித்த தம்பதிகள் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்த நிலையில், தகவலறிது தமிழக கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு அம்பியூலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.