மத்திய கிழக்கு போர் தாக்கம் ; இலங்கை தென்னை ஏற்றுமதி கடும் பாதிப்பு
மத்திய கிழக்கில் பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் தென்னை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்று இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
South Asians & Diaspora மேலும், இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
இதன் காரணமாக தென்னை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி மூலம் வருடாந்தம் ஈட்டப்படும் 1,200 மில்லியன் முதல் 1,800 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வருமானம் இந்த ஆண்டில் கணிசமாகக் குறையக்கூடும்.

துருவிய தேங்காய், தேங்காய் பால் மற்றும் தேங்காய் பால் மா போன்ற உற்பத்திகளுக்கான பிரதான சந்தையாக மத்திய கிழக்கு நாடுகள் விளங்குகின்றன.
ஆனால் தற்போதைய போர்ச் சூழலால் இந்த நாடுகளுக்கான ஏற்றுமதியில் தடைகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் கப்பல் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்வதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
உள்நாட்டிற்குள், தொழில் துறைப் பகுதியில் எரிபொருள் விலை உயர்வினால் உற்பத்தி செலவில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தென்னை உற்பத்தியில் நூற்றுக்கு நூறு சதவீதமும் மத்திய கிழக்கு சந்தையையே சார்ந்துள்ளது.
போர்ச் சூழல் காரணமாக இந்தச் சந்தை தற்போது முழுமையாக செயலிழந்துள்ளதால் ஏற்றுமதிக்கு ஒதுக்கப்பட்ட பெரும் அளவிலான தேங்காய்கள் பின் தங்கியுள்ளது.
இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு எஞ்சியுள்ள தேங்காய்களை உள்நாட்டு எண்ணெய் உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.