உள்ளாடைக்குள் பாம்புகள் ; வெளிநாட்டு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கையர்
நாட்டிலிருந்து மூன்று மலைப்பாம்புகள் உள்ளாடைகளில் மறைத்து வெளியே கடத்த முயன்றதற்காக இலங்கையர் ஒருவர், பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த குறித்த சந்தேக நபர் தாய் ஏர்வேஸ் விமானத்தில் நள்ளிரவு 12.06 மணிக்கு பாங்காக்கிற்கு வந்ததாக செவ்வாய்க்கிழமை (01) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக குற்றப் புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளாடையில் மலைப்பாம்புகள்
ஷீஹான் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு வந்த மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடையில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அதன் பின்னர் சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ஏற்கனவே பல்வேறு வனவிலங்கு இனங்களை கடத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவர் வனவிலங்குகளை கடத்திய குற்றச்சாட்டில் அவர் கொழும்பில் வைத்து 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.