இலங்கை பெண் லாஸ்லியாவா இது? என்ன ஆச்சு... புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளின் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் மிகபெரும் வரவேற்ப்பை பெற்றவர் இலங்கை பெண்ணான லாஸ்லியா (Losliya Mariyanesan).
இவர் இலங்கையில் பிறந்து அந்நாட்டில் உள்ள ஊடகம் ஒன்றில் செய்திவாசிப்பாளராக பணிப்புரிந்து வந்த நிலையிலேயே அவருக்கு பிக்பாஸ் சீசன் 3-யில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இவரின் யாழ்ப்பாண தமிழ் பேசும் அழகும், இவரின் க்யூட் க்யூட் ரியாக்ஷனை பார்க்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர்.
இவர் பங்குபெற்ற சீசன் 3-யில் நடன இயக்குனர் சாண்டி, நடிகர் கவின் , தர்ஷன் , முகின் ராவ் எனப் பலர் இருந்ததால் அந்த சீசன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து லாஸ்லியா ‘ ஃப்ரெண்ட்ஷிப் ’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் . அந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்திருந்தார். இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதன்பின் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் தயாரித்து நடித்த ‘ கூகுள் குட்டப்பா ’ படத்தில் நடித்திருந்தார் . தர்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
புதுவிதமான கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம் குழந்தைகளுக்கு பிடித்த திரைப்படமாக இருந்து ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது.
தற்போது மெலிந்த தோற்றத்தில் இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் .