வத்தளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு! ஒருவர் அதிரடி கைது
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (25-02-2022) பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 45 வயதான சந்தேக நபர் வத்தளை கெரவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 268 கிராம் ஹெரோயின் மற்றும் 7 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த பணம் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.