இலங்கையில் கொடிய நோயால் அதிகரிக்கும் இறப்புகள்: அதிகாரிகள் எச்சரிக்கை
நாட்டில் ஆண்டு தோறும் அதிக உயிரிழப்பு விகிதத்துடன் தொற்றக்கூடிய நோயாக காசநோய் மாறியுள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வருடாந்தம் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை (21-03-2022) பிற்பகல் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவ வல்லுநர் ஹேமந்த ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சைகளை பெற்றுக் கொண்டால் காசநோயை குணப்படுத்த முடியும். காசநோய் சுகாதாரத் துறைக்கு ஒரு சுமையாக மாறியுள்ளது.
தற்போது டெங்குவுக்கு அடுத்தபடியாக அதிக தொற்றுநோய்கள் உள்ளன. நீண்ட கால சிகிச்சை மூலம் மட்டுமே காசநோயை குணப்படுத்த முடியும். சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், நோய் உடல் செயல்பாடுகளை ஆழமாக பாதிக்கும்.
காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் அன்றாடப் பணிகளில் ஈடுபடுவதில் சிரமங்களை எதிர்கொள்வார்கள்- என்று குறிப்பிட்டார்.