இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ராஜினாமா
இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பந்துர திலீப விதாரண தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அவர் பதவி விலகியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
ராஜினாமா செய்த மூன்றாவது நபர்
தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய கலாநிதி பந்துர திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராவார்.
இதற்கிடையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த மூன்றாவது நபராக கலாநிதி பந்துர திலீப விதாரண காணப்படுகிறார்.
அதேவேளை முன்னதாக, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் ருவான் விஜயமுனி ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.