புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் இலங்கை!
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வௌிவந்துள்ளது.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 6 அல்லது 7 விமானங்களின் காலம் நிறைவடைகின்றது.
இதன் காரணமாக , புதிதாக குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகள் வருகை
அடுத்த மூன்று மாதங்களில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மூலம் சிறப்பான சேவையை வழங்கவுள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அதேவேளை ஶ்ரீலங்கா விமான நிலையத்திற்கு சொந்தமாக எந்தவொரு விமானமும் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன் , அனைத்து விமானங்களும் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை எனவும் அவ்வாறான 24 விமானங்கள் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.