நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த இலங்கையின் தமிழ் முன்னணி நடிகை!
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக நாளை மருதனை எல் பின்ஸ்டன் மண்டபத்துக்கு முன்னால் அனைவரும் கட்சி, மதம் இனம், மொழி கடந்து அணி திரள வேண்டும் என இலங்கையின் தமிழ் முன்னணி நடிகைகளில் ஒருவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பெண்கள் அணியின் ஒருங்கிணைப்பாளருமமான சாந்தி பானுஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (01-11-2022) மாலை கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பின் ஒன்று கூடலின் போது இந்த அழைப்பை விடுத்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அரசின் அடக்கு முறை தொடர்கிறது, காவல்துறையினரின் அராஜகம் நாளுக்கு விஸ்வரூபம் எடுக்கிறது இது உடன் நிறுத்தப்பட வேண்டும்.
அணைத்து பல்கலைகழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் சகோதரர் வசந்த முதலிகே வணக்கத்தக்குரிய ஸ்ரீதம்ப தேரர் உள்ளிட்ட அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த மக்கள் எதிர்ப்பு அலையில் பிரதான எதிர் கட்சி, அரசியல் தலைவர்கள், பொது மனித அமைப்புக்கள், மாணவர்கள் இளம் சட்டத் தரணிகள் சங்கம், சட்டதாரணிகள் சங்கம், மத தலைவர்கள், பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்று சேர உள்ளோம் என்று குறிப்பிட்டார்.