பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
லாஹூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இறுதிப் போட்டி
அதற்கமைய முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
111 வெற்றி ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி,8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் 18.1 ஓவர்களில் 114 ஓட்டங்களை பெற்று அபார வெற்றியடைந்தது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி 191 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, தொடரின் இறுதி லீக் போட்டியில் எதிர்வரும் 29 ஆம் திகதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி, 31 ஆம் திகதி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.