ரஷ்யா - உக்ரைன் கூலி படைகளாக இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள்!
இலங்கையின் நூற்றுக்கணக்கான முன்னாள் இராணுவ வீரர்கள் தீவில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கூலிப்படையாக மாறியுள்ள நிலையில், உக்ரைனில் முன் வரிசையில் ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் போரிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் டொனொட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய துருப்புகளின் பதுங்குழியொன்றின் மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த இலங்கையர்களான சேனக பண்டார தனது நாட்டை சேர்ந்தவரான நிபுண சில்வாவை அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முயன்றுள்ளார்.
36 வயதான சேனகவின் கால், கையில் இருந்து குருதி வெளியேறிக்கொண்டிருந்தது. மேலும், நிபுண சில்வாவின் நெஞ்சில், கை, காலிலும் காயங்கள் காணப்பட்டன என சேனக தெரிவித்தார்.
கடும் தாக்குதல் காரணமாக அந்த இடத்திலிருந்து இரண்டு இலங்கையர்களும் வெளியேற்றப்பட்டவுடன் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பதுங்குகுழிகளை உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளனர்.
சேனக கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வேளையில் அவர் இதனை வட்ஸ்அப் குரல் செய்திகளில் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.