ஆசியாவின் சொர்க்கபுரியாக இலங்கை ஆகியிருக்க வேண்டும்! மனோ வெளியிட்ட தகவல்

Mano Ganeshan Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Switzerland Sri Lanka Budget 2022
By Shankar Sep 01, 2022 09:33 PM GMT
Shankar

Shankar

Report

2001ஆம் ஆண்டில் இருந்து இந்த நாடாளுமன்றில் நான் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு செலவு திட்ட உரைகளையும் கேட்டு சலித்து போயுள்ளேன்.

ஒவ்வொரு வருடமும் இவர்கள் கூறும் சுந்தர கதைகள் உண்மையாகி இருக்குமானால், இந்நாடு இன்று சுவிட்சர்லாந்தை விட முன்னேறி இருக்க வேண்டும். ஆசியாவின் சொர்க்கபுரி ஆகி இருக்க வேண்டும். ஒன்றும் நடக்க வில்லையே. “ரிவர்ஸ் கியரில்” அல்லவா பின்னோக்கி போகிறோம்? ஆசியாவில் பின்னோக்கி போய், இன்று ஆபிரிக்க மட்டத்தில் இருக்கிறோம்.

ஆசியாவின் சொர்க்கபுரியாக இலங்கை ஆகியிருக்க வேண்டும்! மனோ வெளியிட்ட தகவல் | Sri Lanka Should Be The Paradise Of Asia Mano Mp

ஆகவே, நிதி அமைச்சரின் உரையின் 19ம் அத்தியாயம் பற்றி மட்டும் வெகுவாக நான் உரையாட விரும்புகிறேன். அது “சமூக நலன்புரி” என்பதாகும்.

சமுக நலன்புரி கொடுப்பனவுகள் பெறுகின்ற பெயர் பட்டியலில், தோட்ட தொழிலாளர்களும், கொழும்பு நகர பாமர மக்களுக்கும் இடம்பெற வேண்டும். இதை நாம் கண்காணிப்போம்.

கடந்த எமது நல்லாட்சி அரசின் போது, நாம் அதற்கு முந்தைய ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோம். இந்த ஆட்சி வந்ததும் அந்த வழக்குகள் பற்றி ஒரு ஆணைக்குழு அமைத்தீர்கள்.

ஆசியாவின் சொர்க்கபுரியாக இலங்கை ஆகியிருக்க வேண்டும்! மனோ வெளியிட்ட தகவல் | Sri Lanka Should Be The Paradise Of Asia Mano Mp

அந்த ஆணைக்குழு இவர்களை நிபராதிகள் என அறிக்கை தந்தது. அதை அடிப்படையாக கொண்டு சட்ட மா அதிபர் அந்த வழக்குகளை வாபஸ் வாங்கினார்.

எனவே இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, சாட்சிகள் அழைக்கப்பட்டு, அவர்கள் எவரும் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதை தெளிவாக அறிந்துக்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்.பி மனோ கணேசன் (Mano Ganesan) இன்றைய தினம் (01-08-2022) இடைக்கால பாதீடு விவாதத்தில் உரையாடும் பொழுது கூறினார்.

ஆசியாவின் சொர்க்கபுரியாக இலங்கை ஆகியிருக்க வேண்டும்! மனோ வெளியிட்ட தகவல் | Sri Lanka Should Be The Paradise Of Asia Mano Mp

இன்றைய விவாதத்தில் சிங்கள மொழியில் மனோ எம்.பி மேலும் கூறியதாவது,

தமது உரையில் ஜனாதிபதி 19ம் அத்தியாயத்தில் என்ன சொல்கிறார்? இதோ வாசிக்கிறேன். “சமூக நலன்புரி பதிவகம் ஒன்றை தாபிக்க தரவு சேகரிப்பு இப்போது நடைபெறுகிறது.

பக்க சார்பற்ற ஊர்ஜிதப்படுத்த கூடிய அளவுக்கோல்கள் மூலம் பயனாளிகளை அடையாளம் காணும் புதிய பொறிமுறை தாபிக்கப்படுகிறது.” என்று ஜனாதிபதி கூறுகிறார்.

இது நல்லது. நான் ஒருபோதும் இலவச கொடுப்பனவுகள் வழங்கும் கொள்கையை ஆதரிப்பவன் அல்ல. ஆனால் 1948 ஆம் ஆண்டிலிருந்தே அனைத்து திருடர்களும் சேர்ந்து இந்நாட்டை நாசமாக்கி விட்டார்கள்.

ஆசியாவின் சொர்க்கபுரியாக இலங்கை ஆகியிருக்க வேண்டும்! மனோ வெளியிட்ட தகவல் | Sri Lanka Should Be The Paradise Of Asia Mano Mp

இதனால், நாட்டில் வாழும் குறை வருமானம் கொண்ட, குறை சந்தர்ப்பங்கள் கொண்ட பிரிவினர் துன்பத்தில் உழல்கின்றனர். ஆகவே இது ஒரு “சமூக அவசர காலம்”. ஆகவே இந்த காலத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அவர்கள் உயிர்வாழ கொடுப்பனவுகள் அவசியம் என நான் நம்புகிறேன்.

இந்த நிலையில், கொடுப்பனவுகளை, உதவிகளை பெரும் பயனாளிகளை தெரிவு செய்வது என்ற முறையில் உள்ள அரசியல் ஊழலை ஜனாதிபதி தெரிந்து கொண்டுள்ளார் என நான் நம்புகிறேன்.

இந்த நாட்டை நாசமாக்கிய திருட்டு அரசியல்வாதிகள், இதிலும் தங்கள் ஆதரவாளர்களை போட்டு நிரப்பியுள்ளனர்.

ஆசியாவின் சொர்க்கபுரியாக இலங்கை ஆகியிருக்க வேண்டும்! மனோ வெளியிட்ட தகவல் | Sri Lanka Should Be The Paradise Of Asia Mano Mp

ஆகவே இன்று சமுர்தியாக இருக்கலாம், வேறு கொடுப்பனவுகளாக இருக்கலாம், இவற்றை பெரும் பயனாளிகள் பெயர் பட்டியலில், வசதி உள்ளவர்கள் , அதாவது உதவி பெற தகைமை இல்லாதோர் கணிசமாக இருக்கிறார்கள்.

அதேவேளை உதவி பெற வேண்டிய குறை வருமானம் கொண்ட, குறை சந்தர்ப்பங்கள் கொண்ட பிரிவினர் பட்டியலில் இல்லாமல் இருக்கிறார்கள். இத்தகைய உதவி தேவைப்படும் பெருந்தொகை மக்கள், மலைநாட்டு தோட்டங்களில் கஷ்ட வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கொழும்பு மாநகரத்தில் கஷ்டப்படும் நகர ஏழைகளாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களை, வேறு பிரிவினர் பெறுகிறார்கள்.

இந்த பெயர் பயனாளி பெயர பட்டில்களை தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் புதிய பக்க சார்பற்ற ஊர்ஜித அளவுகோல்கள் எவை என்பதை அறிய நாம் விரும்புகிறோம். ஆகவே வெளிப்படை தன்மையுடன், எமது கருத்துகளையும், பங்களிப்புகளையும், ஜனாதிபதி-நிதியமைச்சர் உள்வாங்க வேண்டும்.

ஆசியாவின் சொர்க்கபுரியாக இலங்கை ஆகியிருக்க வேண்டும்! மனோ வெளியிட்ட தகவல் | Sri Lanka Should Be The Paradise Of Asia Mano Mp

கொழும்பு என்பது அனைவருக்கும் பொதுவான நாட்டின் தலைநகரம். இங்கே நிரந்தரமாக வாழ்வோரும் உள்ளனர். தொழில் காரணமாக தற்காலிகமாக வாழ்வோரும் உள்ளனர். சொந்த வீடுகளில் வாழ்வோரும் உள்ளனர். வாடகை வீடுகளில் வாழ்வோரும் உள்ளனர். எல்லோருக்கும் குடும்பம், குழந்தைகள், வயிறு, பசி இருக்கின்றன.

ஆகவே இந்த சமுக அவசர காலத்தில், குறைந்த வருமானம் கொண்ட அனைவரும் கொடுப்பனவு பட்டியலில் உள்வாங்கபட வேண்டும்.

குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள் பரவலாக இந்த கொடுப்பனவுகளை பெறும் பின்தங்கியோர் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை. காகிதத்தில் எழுதப்படும் நாட்சம்பள கணக்கை முப்பது நாளால் பெருக்கி மாத வருமானத்தை கணக்கிட்டு இவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.

ஆனால், இந்த சம்பளம், வருமானம் இவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது உங்கள் விளங்க வேண்டும். எனது இந்த கேள்விகளுக்கு ஜனாதிபதி- நிதி அமைச்சர் உரிய பதில்களை வழங்க வேண்டும் என கோருகிறேன்.

16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
9ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US