இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சருக்கு நேர்ந்த கதி!
கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இலங்கையில் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவ வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸம்மிலுக்கு 42 இலட்சம் ரூபாவை வழங்கியமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது.
அந்த தண்டனைக்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
குற்றம் சாட்டப்பட்டவரின் குடியுரிமையும் 7 ஆண்டுகளுக்குப் பறிக்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.