மோசமான வானிலையால் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உயிரிழப்புக்கள்
நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக, மொத்தம் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இன்று (15) காலை 6:00 மணி வரையான நிலவரப்படி, எட்டு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
35 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 104 பேர் தற்போது இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சீரற்ற கால்நிலையால் 88 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுறது.